தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது? உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்! - சென்னை செய்திகள்

BJP Amar Prasad Reddy Wife files plea in Chennai High Court: தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Chennai High Court
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 8:52 AM IST

சென்னை:பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடிக் கம்பத்தை அகற்றிய காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறி மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவராக உள்ள அமர்பிரசாத் ரெட்டியை கடந்த 21 ஆம் தேதி கானத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக்கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதாகி உள்ளதாகவும், தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுகவின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாலும், போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக தனது கணவர் புகார் கூறியதாலும், ஏடிஜிபியின் நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் கூறி பொய் வழக்குப்பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும் மனு குறித்து பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:விளையாட்டு மைதானங்களில் மது விலக்கு வைக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் ஆணை

ABOUT THE AUTHOR

...view details