செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீரப்பாக்கம். இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில், கடந்த 1989ஆம் ஆண்டு, ஆதிதிராவிட மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், 80 தொகுப்பு வீடுகள் இலவசமாகக் கட்டிக் கொடுக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகள், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஏற்கனவே பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இதுகுறித்து அலுவலர்களிடம் அப்பகுதிவாசிகள் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில், கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில், சங்கர் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இன்று(பிப்.14) காலை அவர் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.