செங்கல்பட்டு:தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அச்சிறுப்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை பல இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுராந்தகம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.