செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோனிஷா (29). இவர், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள அலுவலகத்திற்குச் செல்வதற்காக இன்று வழக்கம்போல் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பெருங்களத்தூர் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி உரசி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த மோனிஷா மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.