செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே சிறிய அளவிலான வினை தீர்த்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது மருத்துவமனை தொடங்கிய காலத்திலேய இருந்து வருகிறது.
மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும். நோயாளிகள் நோயில் இருந்து குணமடைய வேண்டும் எனப் பிரத்தனை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழசை இந்நிலையில், கடந்த ஆண்டு மருத்துவமனை வளாகம் சீரமைக்கப்பட்டது. அப்போது அந்த விநாயகர் ஆலயம் வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. புதியதாக அமைந்த இந்த ஆலயத்திற்கு இன்று மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.4) பிறந்த 30 குழந்தைகளுக்கு தேவையான கிப்ட் பேக் வழங்கினார். மேலும் மருவத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தினார்.