செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர்கள் நேற்று (ஜூன் 20) சரியான எடையில் தரமான அரிசி, நுகர்பொருள் போன்றவைகளை வாணிபக் கழகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தகுந்த இடைவெளிவிட்டு கையில் பதாகைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசு நியாய விலைக்கடைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஊழியர்கள் போராட்டம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சென்னையில் நியாய விலைக்கடையில் வேலை செய்த சுரேஷ் என்ற ஊழியர் பணியின்போது கரோனா தொற்று ஏற்பட்டு இறந்தார். அவருக்கு அரசுத்துறை நிர்வாகம் சார்பில் இரங்கலோ, இழப்பீடோ வழங்கவில்லை. அரசு அவர் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் ரூ.50 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்.
மேலும் நியாய விலைக் கடைகளுக்கு தரமற்ற அரிசியை அரசு தான் வழங்குகிறது. அதைத்தான் நாங்கள் விநியோகம் செய்கிறோம். ஆனால், அரசு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு காரணம் அரசு தான் நாங்கள் இல்லை' எனத் தெரிவித்தனர்.