செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறையளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மதுராந்தகத்தை அடுத்த முதுகரையில் இயங்கிவரும் அரசுப்பள்ளியில் "இல்லம் தேடி கல்வி" என்ற அரசு நிகழ்ச்சியை கல்வித்துறை அலுவலர்கள் நேற்று (ஜன.3) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்களை கல்வித்துறை அலுவலர்களால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.