தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து மோதி டிராக்டர் ஓட்டுநர் மரணம் - Chengalpattu government bus collision

செங்கல்பட்டில் அரசுப் பேருந்து மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டில் அரசு பேருந்து மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் பலி
செங்கல்பட்டில் அரசு பேருந்து மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் பலி

By

Published : Dec 11, 2021, 3:59 PM IST

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது, சென்னையில் இருந்து கும்பகோணம் மார்க்கமாக சென்ற அரசு பேருந்து அந்த டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டர் ஓட்டுநர் ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுப்பாக்கம் காவல் துறையினர் ராம்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போதை ஸ்டாம்புகள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details