செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பகுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபர்களால் முன்னாள் அதிமுக பேரூராட்சி துணைத் தலைவர் அரசு என்ற ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கொலைக்கு இதுதான் காரணமா? - admk news
செங்கல்பட்டு: முன்னாள் அதிமுக பேரூராட்சி துணைத் தலைவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
pro
கிடைத்த தகவலின்படி, இடைக்கழிநாடு பேரூராட்சியில் கடந்த வாரம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் ஒப்பந்த வேலை வந்துள்ளது. இந்த வேலையை ஆளும் கட்சியை சேர்ந்த அரசு மொத்தமாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை பிடிக்காத சிலரால் இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது