தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2021, 9:10 AM IST

ETV Bharat / state

செங்கல்பட்டில் முதல்முறையாக இன்றுமுதல் மக்கள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு: புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உருவானதைத் தொடர்ந்து முதல்முறையாக அங்கு மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (பிப். 01) நடைபெறுகிறது.

செங்கல்பட்டில் முதல்முறையாக இன்றுமுதல் மக்கள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டில் முதல்முறையாக இன்றுமுதல் மக்கள் குறைதீர் கூட்டம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தற்போது செங்கல்பட்டு தனி மாவட்டமாக இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமைகளில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின், முதல் மக்கள் குறைதீர் கூட்டம், இன்று (பிப்ரவரி 1) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இனிமேல், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தங்களது குறைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து, தீர்வு காணலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அறிவித்துள்ளார்.

குறைதீர் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள், முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் அளிக்கவருவோர், தங்களுடைய ஆதார் அட்டை, கைப்பேசி எண்களையும் அவசியம் எடுத்துவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details