புரெவி புயலால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்துவரும் மழையால், அங்குள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாெடர்ந்து பெய்துவரும் மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. இதனால் முழுக் கொள்ளளவை எட்டிய ஏரியிலிருந்து, தற்போது விநாடிக்கு, 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
கிளியாற்றின் வழியாக உபரிநீர் பெருக்கெடுத்துப் பாய்வதால், அவ்வாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுாத்திக்குப்பம், நீலமங்கலம், முருக்கஞ்சேரி, குன்னத்துார், கருங்குழி, இருசமநல்லுார், பூதூர், ஈசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.