செங்கல்பட்டு : நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஐந்து அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 4014 -ல் நேற்று (பிப்.18) திடீரென கரும்புகை எழுந்துள்ளது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், டாஸ்மாக் கடையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.