தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழப்பு - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்

செங்கல்பட்டு: மறைமலை நகர் அருகே, இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில், கணவர், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
சாலை விபத்தில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

By

Published : Jan 19, 2021, 12:05 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த பேரமனூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மனைவி ஆதிலட்சுமியுடன், இன்று அதிகாலை, திண்டிவனம் சென்னை மார்க்கமாக, மறைமலை நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாமண்டூர் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் கணவர் மனைவி இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படாளம் காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:செங்கல்பட்டு மாவட்டத்தின் 5ஆவது மினி கிளினிக்: தொடங்கி வைத்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details