செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (29). பிரபல ரவுடியான இவர் மீது செங்கல்பட்டு, திருப்போரூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக் கொலை - Chengalpattu district news
15:04 December 22
செங்கல்பட்டு: மேலையூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சுடுகாடு அருகே முகம் சிதைந்த நிலையில் வெட்டுக் காயங்களுடன் சடலம் கிடப்பதாக திருப்போரூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்து இருப்பது ரவுடி சதீஷ் என்பதை உறுதிசெய்தனர்.
பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போன்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவன் கைது!