கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் பெருமளவில் மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளனர்.
இருளர் மக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல் - செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
செங்கல்பட்டு: இருளர் மக்களுக்கு கிராமிய வளர்ச்சி சங்கம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மளிகைப்பொருள் வழங்கிய தொண்டு நிறுவனம்
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துறை இருளர் காலனியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் கிராமிய வளர்ச்சி தொண்டு நிறுவனம் சார்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு!