சென்னை :தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், வீட்டினுள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நிவாரண உதவிகள் மக்களுக்கு வழங்கிய ஈபிஎஸ் இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா சென்னை இடையே நேற்று முன்தினம் (நவ.11) கரையைக் கடந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (நவ.12) பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தாம்பரம், பல்லாவரம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் மேலும் தாம்பரம், கீழ்கட்டளையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் நடந்து சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி, புடவை, பிரட், பிஸ்கட் மற்றும் உணவுகளை வழங்கினார்.அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : பொதுச் செயலாளர் இல்லாமல் அவைத் தலைவரை நியமிக்க முடியுமா - அதிமுக தலைமைக்கு நீதிமன்றம் கேள்வி