செங்கல்பட்டு:மதுராந்தகத்தில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள கடமலைப்புத்தூர் பகுதியில் ஜெகவரதா ரெட்டியார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அக்கம்பக்கத்தில் வேறு எந்த வீடுகளும் இல்லாமல் சற்று ஒதுக்குப் புறத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி இரவு 8 மணியளவில், இவர் வீட்டினுள் திடீரெனப் புகுந்த எட்டு முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டில் இருந்த அனைவரின் கை, கால்களைக் கட்டிப் போட்டனர். பின்னர், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து அச்சிருப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின்படி, மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் காணிப்பாளர் பரத் விசாரணையில் இறங்கினார். மதுராந்தகம் ஆய்வாளர் ருக்மாங்கதன், சூனாம்பேடு ஆய்வாளர் மதியரசு, அச்சிருப்பாக்கம் ஆய்வாளர் இளவரசு ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.