தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 4 லட்சம் மதிப்பிலான போலி கிருமி நாசினி பொருள்கள் பறிமுதல்! - தமிழ் செய்திகள்

சென்னை: போலியான முறையில் தயாரிக்கப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமிநாசினி பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலி கிருமிநாசினி பொருள்கள் பறிமுதல்
போலி கிருமிநாசினி பொருள்கள் பறிமுதல்

By

Published : May 23, 2020, 4:38 PM IST

சென்னை ராயபேட்டை வி.எம். தெருவில் அமைந்துள்ள ஜினால் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தில், போலியான வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலியாக தயார் செய்யப்பட்டிருந்த கிருமி நாசினி மருந்துகளின் மாதிரிகளைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் வடபெரும்பாக்கத்தில் உள்ள குடோனில் போலியாக தயாரித்த கிருமிநாசினி பொருள்களைப் பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு விரைந்து பதுக்கி வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி கிருமி நாசினி மருந்துகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கிருமி நாசினி பொருள்களைப் போலியாக தயாரித்த குற்றத்திற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துளசி நாதுசிங் (25), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரானா (29) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் முக்கியக் குற்றவாளியான குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ் பட்டேலை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் தூய்மைப் பணியாளரை தாக்கியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details