செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாபு என்பவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ரகு என்பவர் மாமண்டூர் பகுதியை சேர்ந்த ராஜ் (வயது 52 ) மற்றும் எபினேசர் (வயது 27) ஆகியோருக்கு கடந்த 7 மாதங்களுக்குமுன்பு வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.
ஆனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை, தொடர்ந்து அன்று முதல் இன்று வரை வீடு பூட்டியே இருப்பதாலும் இதுவரை வாடகை தராததாலும் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பாபு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் ராஜ் மற்றும் எபினேசருக்கு போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டின் வாடகையை கொடுங்கள் இல்லையெனில் வீட்டை காலிசெய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள் என எச்சரித்துள்ளனர்.