தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

செங்கல்பட்டில்: 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என, மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?
செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

By

Published : May 5, 2021, 4:14 PM IST

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில், 13 பேர் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் பரவின. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

மூன்று நாளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தினமும் 6 ஆயிரம் கிலோ நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று (மே.4) இரவு 200 படுக்கைக் கொண்ட வார்டில் 176 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த வார்டில் 40 வயதிற்கு உட்பட்டோர் 5 நபர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர், 8 ஆண்கள், 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். இறந்த 13 பேரில், 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

ABOUT THE AUTHOR

...view details