செங்கல்பட்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் தனது பரப்புரையை இன்று (மார்ச் 22) வேங்கடமங்கலம் பகுதியிலிருந்து தொடங்கினார். அப்பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, எதிரே பரப்புரைக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வரலட்சுமி மதுசூதனன் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சதீஷ் திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.