செங்கல்பட்டு:காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்திய பிரியாவின் கீழ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டத்திற்குள்பட்ட அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் சத்திய பிரியா திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
ஆய்வின்போது, அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய அன்றாடச் செயல்பாடுகள் குறித்து, காவல் நிலைய ஆய்வாளர், அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு, ஆவணங்களைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர், காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காவலர் குடியிருப்பிற்குச் சென்ற டிஐஜி, காவலர்களின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். மேலும், காவல் நிலையத்திற்கு முன் இருந்த பழங்காலக் கிணற்றையும் பார்வையிட்டார்.
பின்னர், விடைபெறும் முன் எந்தக் குறைபாடுகள் பற்றியும் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்று சத்திய பிரியா கூறியது, காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம