செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை, டிஜிபி சைலேந்திரபாபு, இன்று (அக்.5) ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா ஆகியோர் உடன் இருந்தனர். அதனையடுத்து, படாளம், மதுராந்தகம் ஆகிய காவல் நிலையங்களிலும் டிஜிபி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.