தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.36 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில் எரித்து அழிப்பு - Chengalpattu district crime news

தமிழ்நாடு முழுவதும் பிடிபட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை போதை ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் தீயில் எரித்து அழித்தனர்.

கஞ்சா தீயில் எரித்து அழிப்பு
கஞ்சா தீயில் எரித்து அழிப்பு

By

Published : Mar 8, 2022, 3:43 PM IST

செங்கல்பட்டு:தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போதைப்பொருள்கள் சோதனையில், பல மாவட்டங்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், போதை ஒழிப்புப்பிரிவு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன. பின்னர், அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை, செங்கல்பட்டு அருகே இன்று (மார்ச் 08) போதை ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் எரித்து அழித்தனர். மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சுமார் 9 டன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் எரிக்கப்பட்டன.

கஞ்சா தீயில் எரித்து அழிப்பு

போதை தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, ஏறத்தாழ 36 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வேளாண்துறை அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details