கல்பாக்கம் அணு மின்நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படக்கூடும் என்பதால் அதைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மணமை கிராமத்தில் நேற்று (மார்ச்7) நடந்தது. இதில் 10 அம்ச கோரிக்கையை தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கல்பாக்கம் நிலா கமிட்டி (கல்பாக்கம் நியுக்ளியர் இன்ஸ்டாலேசன் லோகல் அதாரிட்டி கமிட்டி) உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
கல்பாக்கம் நிலா கமிட்டியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை தீர்மானங்கள்
- இந்தியா முழுவதும் உள்ள அணுக் கதிர் கழிவுகளை கல்பாக்கத்திற்கு கொண்டு வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- சுற்றுவட்டாரத்தில் கதிர்வீச்சின் அளவு மாதம் இருமுறை சரிபார்த்து உரிய மருத்துவச் வசதி வழங்க வேண்டும்.
- அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை சுற்று வட்டார மக்களுக்கு என்று இலவசமாக அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பத்து வகையான அம்ச தீர்மானங்களை முன்வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், கிராம பொதுமக்களும் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மகளிர் தினம்: கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பெண்களின் நம்பிக்கை கதை!