தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எனக்கு கொரோனா பாதிப்பிருக்கிறது' - பாதி வழியில் சக பயணிகளை அலறவிட்ட பெண்! - corona virus rumor in melmaruvathur

செங்கல்பட்டு: தனக்கு கொரோனா பாதிப்பிருக்கிறது எனக்கூறி பாதி வழியில் சொகுசுப் பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்ற பெண்ணால் சக பயணிகள் பீதியடைந்த சம்பவம் மேல்மருவத்தூர் அருகே நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டுச் செய்திகள்  மேல் மருவத்தூர் கொரோனா பீதி  corona virus rumor in melmaruvathur
'எனக்கு கொரோனா பாதிப்பிருக்கிறது'- பாதி வழியில் சக பயணிகளை அலறவிட்ட பெண்

By

Published : Mar 14, 2020, 8:18 AM IST

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்ற சொகுசு பேருந்தில் சுஜிதா என்ற பெண் பயணம் செய்துள்ளார். இவர், மேல்மருவத்தூர் அருகே பேருந்து வந்துகொண்டிருக்கும் போது, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கூறி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

பேருந்திலிருந்து இறங்கிய அந்தப் பெண் பின்னால் வந்த காரில் ஏறி சென்றுள்ளார். கொரோனா தொற்று உள்ள ஒருவருடனா பயணம் செய்தோம் என பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பீதியடைந்ததோடு, உடனே பேருந்தில் இருந்து இறங்கி நடத்துநரிடம் தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அந்தப்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய நண்பர்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாட செல்வதால் பொய் சொல்லி பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தைப் பயணிகளிடம் காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து, அனைவரும் பேருந்தில் ஏறிச் சென்றனர். கொரோனா பாதிப்புள்ளதாகக் கூறி, பேருந்தை பெண் நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் சற்று பீதியை கிளப்பியது.

இதையும் படிங்க:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பு

ABOUT THE AUTHOR

...view details