செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் கமாண்டோ படையினர் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
’தமிழகத்தில் இதுவரை 1,57,000 பேருக்கு கரோனா தடுப்பூசி' - செங்கல்பட்டு செய்திகள்
செங்கல்பட்டு: தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் தயங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அப்போது, “இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் வந்து கொண்டும் இருக்கின்றன. தடுப்பூசி போடுவதில் தேவையற்ற பயம் மக்களுக்கு வேண்டாம். வருங்காலத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்ற இலக்கை நாம் அடைய, பொதுமக்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை 'குழந்தைகள் நல' அலுவலரிடம் ஒப்படைப்பு