தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் எதிரோலி: தனிப்படுத்தப்பட்ட மதுராந்தகம்! - Madhuranthagam is now under quarantine place

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் மூன்று பேருக்கு கரொனா தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதி முழுவதும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.

Corona Spread, Madhuranthagam is now under quarantine place
Corona Spread, Madhuranthagam is now under quarantine place

By

Published : Apr 3, 2020, 2:22 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகர், காந்திநகர் பி. என். சாரி தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று பேர் டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டிற்கு சென்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று அவர்களை சுகாதாரத்துறையினர் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மூன்று பேரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் எதிரோலி: தனிப்படுத்தப்பட்ட மதுராந்தகம்!

இந்நிலையில் இன்று கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்தப் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக வருவாய்த்துறையினர் அறிவித்தனர். இதனால் அப்பகுதிகளிலிருந்து, வெளியே செல்வதற்கும், வெளியிலிருந்து உள்ளே வருவதற்கும் அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: அரசின் கவனம் பெறுமா?

ABOUT THE AUTHOR

...view details