செங்கல்பட்டு மாவட்டம் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,
தாம்பரம் தாலுகாவில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக சென்னையின் முக்கிய நுழைவாயிலான தாம்பரம் நகராட்சிப் பகுதியில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அலுவலர் மொய்தீன் தலைமையில் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
முகக்கவசம் இல்லாமல் வந்தால் ரூ.100 அபராதம்! - Chengalpattu corona situation
செங்கல்பட்டு: தாம்பரம் பகுதியில் முகக்கவசம் இல்லாமல் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு நகராட்சி அலுவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு ஐந்து முகக்கவசங்களை வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில், மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலை, காந்தி சாலை, சண்முகம் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, தாம்பரம் கிழக்குப் பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் வெளியேவரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு ஐந்து முகக்கவசங்களை வழங்கிவருகின்றனர்.
மேலும் அனைத்து வாகன ஓட்டிகளையும், சாலைகளில் நடமாடும் பொதுமக்களையும் தெர்மல் ஸ்கேனிங் கருவி மூலம் வெப்ப பரிசோதனை செய்கின்றனர். அப்போது, உடல் வெப்ப பரிசோதனை 100க்கு அதிகமாகக் காணப்பட்டால், உடனடியாக அவர்களின் பெயர், விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு, அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை அளிக்கவும் அலுவலர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
இதையும் படிங்க:ஆய்வு சென்ற கோட்டாட்சியருக்கு வெப்ப திரையிடல் சோதனை!