தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் - Minister Tha.mo. Anbarasan

செங்கல்பட்டு: கரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

By

Published : May 13, 2021, 3:22 PM IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்ஆர் ராஜா, ஈ. கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், பனையூர் பாபு, எஸ் எஸ் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ‌.அன்பரசன், தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேவைப்படும்பட்சத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து தேவையான படுக்கைகளை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், ஊரடங்கு காலங்களில் வெளியில் தேவையில்லாமல் சுற்றுவோர் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை சார்ந்த அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நவீன வசதிகள் மூலம் பணம் திரட்டி ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் கோவை இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details