தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் அமைச்சர் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டில் அமைச்சர் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டில் அமைச்சர் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம்

By

Published : May 25, 2021, 5:41 PM IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கரோனா நோய்த்தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், காஞ்சிபுரம் ஆகியத் தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, ராஜா, கருணாநிதி ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வமும் கலந்து கொண்டனர்.

ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய், சுகாதாரம், காவல் துறை சார்ந்த அரசு ஊழியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர்.

நகராட்சி, பேரூராட்சி நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர்கள், கரோனா தடுப்புப் பணி அலுவலர்களிடம் காணொலி மூலம் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை!

ABOUT THE AUTHOR

...view details