செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் சிலருக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஏழு காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் சில காவலர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இரு காவலர்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சங்கர்நகர் காவல் நிலையத்தில் மேலும் இரண்டு காவலர்களுக்கு கரோனா - காவலர்களுக்கு கரோனா
செங்கல்பட்டு : சங்கர்நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏழு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மேலும் இருவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சங்கர் நகர் காவல்நிலையம்
சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது பிற காவலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.