செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சண்முகத்தை கரோனா சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சண்முகம் இன்று (மே 13) மருத்துவமனை மொட்டை மாடியில் இருந்த குடிநீர் பைப்பில் துணியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை - கரோனா நோயாளி அரசுமருத்துவமனையில் தற்கொலை
செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Corona
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். கரோனா தொற்றின் பயம் காரணமாக சண்முகம் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.