செஞ்சி தாலுகா, இல்லோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது நண்பர் ராஜிவ்காந்தி செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் வேளச்சேரியில் கட்டட வேலை பார்த்துவந்தனர். இவர்கள் இன்று (டிச. 18) காலை வேளச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
சாலை விபத்து
அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வரும்போது, இவர்களுடைய இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து, இவர்கள் மீது மோதியது.
இதில் கார்த்திக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜிவ்காந்தி காயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் கார்த்திக் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐ.நா. தரவரிசை அட்டவணை வெளியீடு: மனிதவள மேம்பாட்டில் இந்தியா பின்னடைவு