சென்னை:இன்று(அக்.26) காலை சென்னை தாம்பரத்தில் இருந்து திருப்போரூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தனியார் கல்லூரி மாணவர் சஞ்சய் பேருந்தில் முன்புற படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளார்.
பேருந்து படியில் தொங்கியபடி பயணம்... தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு... - வண்டலூர்
வண்டலூர் அருகே அரசுப் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர், தவறி விழுந்து உயிரிழந்தார்.
college
பேருந்து வண்டலூர் கொளப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சஞ்சய் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் அட்டூழியம்; தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய வழக்கறிஞர்