தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைனில் விஷம் வாங்கிக்குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை! - கல்லூரி மாணவர்கள் தற்கொலை

ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கிக்குடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 23, 2022, 5:18 PM IST

செங்கல்பட்டு:காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில், எஸ்.ஆர்.எம். கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட ஜோசப் ஜேம்ஸ் என்பவரின் மகன் நிகில் என்பவர் பி.டெக். ஏரோ ஸ்பேஸ், (AEROSPACE) இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இவர்களுடைய குடும்பம் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில், குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகில் பொத்தேரியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் தங்கி கல்லூரிக்குச்சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று (அக்.22) நள்ளிரவு 12 மணியளவில், அவர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டிலேயே வேறொரு அறையில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த நண்பர் ஆதித்ய சவுத்ரிக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆதித்யா சவுத்ரி உடனடியாக நிகிலின் அறைக்குச்சென்று பார்த்தபோது, நிகில் பாதி மயக்க நிலையில் கட்டிலில் கிடந்துள்ளார். உடனடியாக அறையில் இருந்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து, நிகிலை ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி, சிறிது நேரத்திலேயே நிகில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மறைமலைநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஏற்கெனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை, தண்ணீரில் கலந்து நிகில் குடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவன் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை

இதையும் படிங்க:கோவை கார் விபத்து குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் - டிஜிபி சைலேந்திரபாபு

ABOUT THE AUTHOR

...view details