செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது. இதனிடையே வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருகிறது.
செங்கை, காஞ்சி மழை பாதிப்பு: ஸ்டாலின் நிவாரண உதவி - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுசெய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவி
இதன் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்புகளிலும், வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களையும் நேரடியாக ஆய்வுசெய்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சி பி, டி, சி குடியிருப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் வேல்ஸ் பள்ளி நிவாரண முகாம்களை ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி, அமுதம் நகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மேலும், தாம்பரம் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட இரும்புலியூர், வாணியன்குளம் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட பருவமழை சிறப்பு அலுவலர் அமுதா ஐஏஎஸ், அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:school leave: தாமதமாக அறிவிப்பு - தவிக்கும் மாணவர்கள்