தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அண்மையில் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரோனா சிகிச்சைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.
மேலும் பல அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு கரோனா சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் முதலமைச்சர் வலியுறுத்திவருகிறார். கரோனா பேரிடர் காலத்தில் நாள்தோறும் பல பணிகள் குறித்து திட்டமிட்டு அவற்றையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.