சென்னை:தேசிய சித்தா மருத்துவமனையில் சித்தா மருந்துகளை விலங்குளுக்கு செலுத்தி, அவற்றை ஆய்வு செய்வது தொடர்பான வகுப்பு இன்று (ஆக். 30) தொடங்கியுள்ளது.
சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியில் தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பொது மருத்துவ பாடம், வர்மம், யோகம், குழந்தை மருத்துவம் நோய் நாடல், நஞ்சு மருத்துவம் ஆகிய பிரிவுகளில் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகளின் கீழ் பட்டமேற்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இங்கு பயிலும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு சித்தா மருந்துகளை விலங்குகளுக்கு செலுத்தி, அவற்றை ஆய்வு செய்வது குறித்த ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று (ஆக். 30) தொடங்கியுள்ளது. இந்த வகுப்பை தமிழ்நாடு கால்நடை விலங்கியல் பேராசிரியர் கீதா ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.