செங்கல்பட்டு:தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் 27 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகளில், பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.