செங்கல்பட்டு: நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் அலகின் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
இரண்டாம் அலகு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ளது, நெம்மேலி. இப்பகுதியில், கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையின் முதல் அலகு, கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னையின் குடிநீர் பஞ்சத்தைக் கருத்தில் கொண்டு, இங்கு இரண்டாம் அலகிற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.