செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது வேப்பஞ்சேரி கிராமம். அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரும் குழாய்கள், குடிநீர் தொட்டி ஆகியவை பல ஆண்டுகளாக சுத்தம்செய்யப்படாமல், போதிய பராமரிப்பின்றி சுகாதாரமற்று காணப்படுகிறது.
இவற்றின் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீரைக் குடிக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால் பல்வேறு நோய்களும், தொற்றுநோய்களும் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்தக் குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.