தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ! - செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு: தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.

கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ!
கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ!

By

Published : May 13, 2021, 10:03 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வரும் நிலையில், கல்லூரிகளில் கரோனா நோயாளிகளைத் தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரியில் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள ஆண்கள் தங்கும் விடுதியினை, தற்காலிகமாக கரோனா நோயாளிகள் பாதுகாப்பு மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கரோன நோயாளிக்காக அமைக்கபட்டுள்ள 250 படுக்கைகள் கழிவறைகள், சமையலறையினை தாம்பரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு செய்தார். அவருடன் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details