தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து - 6 பேர் உயிரிழப்பு - bus tragic accident

மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 8) லாரி மீது அரசுப் பேருந்து மோதிய சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டில் லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து- 6 பேர் பலி
செங்கல்பட்டில் லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து- 6 பேர் பலி

By

Published : Jul 8, 2022, 10:31 AM IST

Updated : Jul 8, 2022, 3:15 PM IST

செங்கல்பட்டு:சென்னையில் இருந்து கடலூர் நோக்கி, அரசு பேருந்து இன்று (ஜுலை 8) காலை சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே, காலை 9 மணியளவில் செல்லும்போது, இரும்புத் தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது படு பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தின் இடதுபுறம் முழுமையாக சேதம் அடைந்து. ஏறக்குறைய பாதி பேருந்து உருக்குலைந்தது. ஓட்டுநர் இருக்கைக்கு இடது புறம் உள்ள இரு இருக்கைகளும், பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் பின்புறம் ஒட்டிக்கொண்டது.

லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து

இந்த கோர விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கார்கள் மீது கனரக வாகனம் மோதி விபத்து: குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

Last Updated : Jul 8, 2022, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details