செங்கல்பட்டு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாய்- சேய் நலப் பிரிவு இயங்கி வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இங்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
பெயர்ந்து விழுந்த கூரை
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தனசேகரன்- லோகேஸ்வரி. லோகேஸ்வரிக்கு, கடந்த 19ஆம் தேதி, செங்கல்பட்டு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.