தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் - Chengalpattu district collector meeting

செங்கல்பட்டு: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்த ஆலோசனை கூட்டம், பல்லாவரம் நகராட்சியில் நடைபெற்றது.

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி போடுவதை இரட்டிப்பாக்கும் முயற்சி
செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி போடுவதை இரட்டிப்பாக்கும் முயற்சி

By

Published : Apr 30, 2021, 9:49 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்லாவரம் நகராட்சியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, "செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை சுமார் 12 லட்சத்து 44 ஆயிரம் பேர் உள்ளனர்.

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி போடுவதை இரட்டிப்பாக்கும் முயற்சி
இதுவரை மாவட்டத்தில், 10 ஆயிரத்து 81 பேர் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்து உள்ளனர். தற்போது வரை தினமும் 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக 21 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details