செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நேற்று (டிச.24) இரவு நபர் ஒருவர் குடிப்போதையில் நடந்துசென்று கொண்டிருக்கையில் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன், அந்நபருக்கு முதலுதவி செய்து உதவினார். இதுதொடர்பாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்நபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.