தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு இயந்திரங்கள் வைக்கும் மையத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்! - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சென்னை: தாம்பரத்தில் வாக்கு இயந்திரங்களை வைக்கும் மையத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Chengalpattu
Chengalpattu

By

Published : Mar 6, 2021, 4:25 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெறவுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் வாக்களிக்கும் வாக்குப் பெட்டிகளை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் வைக்கப்படவுள்ளது.

இதனால் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் கட்டிட அறைகளை செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சம்பந்தபட்ட அலுவலரிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணன், உதவி ஆணையாளர் சகாதேவன் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details