ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு ஊரடங்கு கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்ததை செங்கல்பட்டு மாவட்டம் சோத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையின் உரிமையாளர், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவகத் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
ஊரடங்கு தளர்வு: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பிரயாணிக்கடை உரிமையாளர் "ஞாயிற்றுக்கிழமைகள்தான் உணவகங்களில் அதிகம் வியாபாரம் நடைபெறும் தினம். அன்று முழு ஊரடங்கு இருந்ததால் வியாபாரம் கடுமையாக பாதித்தது. தற்போது, தமிழ்நாடு முழு ஊரடங்கை தளர்வு செய்து, பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
இதனால், பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்" என ஆம்பூர் பிரியாணி கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆடம்பர கார்களில் விற்பனை செய்யப்படும் 70 ரூபாய் பிரியாணி - காரணம் இதுதான்!