கரோனா ஊரடங்கு மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 31 வரை சில தளர்வுகளுடன் தமிழ்நாடு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முறையான பாதுகாப்புடன் நீதிமன்றங்களை திறந்திட வேண்டும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கரோனா கால வட்டியில்லா கடன் மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை மூன்றாயிரம் ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.